1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 18 ஜனவரி 2025 (07:07 IST)

என் படங்கள் ஓடும்… ஆனால் என்னை நல்ல இயக்குனர் என சொல்ல மாட்டார்கள்.. சுந்தர் சி ஆதங்கம்!

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு ஏற்ற கலகலப்பான படமாக மத கஜ ராஜா உள்ளதாக விமர்சனங்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா நடித்திருக்கும் கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியான பல படங்களில் அதிகம் வசூல் செய்யும் படமாக மத கஜ ராஜா முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து படத்தின் வெற்றிச் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சுந்தர் சி “என் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறும். மக்கள் அதை ரசிப்பார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஒன்று தோன்றும். என்னை நல்ல இயக்குனர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எப்போதும் சிறந்த இயக்குனர்களின் பட்டியல் போட்டால் அதில் என் பெயர் வராது” எனப் பேசியுள்ளார்.