திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (19:21 IST)

அழைப்பு விடுத்த விஷால் - அரசியலுக்கு வருவாரா விவேக்?

நடிகர் விவேக் அரசியலுக்கு வர வேண்டும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அழைப்பு விடுத்துள்ளார்.

 
நடிகர் விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் எழுமீன். தற்காப்பு கலைகளை விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க துடிக்கும் சிறுவர்களை பற்றிய கதையாகும். 
 
இந்த படத்தின் டிரெய்லரை நடிகர்கள் கார்த்தி, விஷால் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டனர். இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டனர்.
 
இந்த விழாவில் பேசிய விஷால் “ விவேக் அரசியலுக்கு வரவேண்டும். அவர் அரசியலுக்கு வந்தால் ஒரு தொகுதிக்கு நல்ல எம்.எல்.ஏ கிடைப்பார்” எனப் பேசினார்.
 
இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விவேக் “விஷாலின் அன்புக்கு நன்றி. நான் “மரம், மாணவர்கள்” என்று கலாம் அய்யா கொடுத்த வேலையை செய்கிறேன். அரசியலுக்கு நான் சரிப்படுவேனா தெரியவில்லை” என பதிவிட்டுள்ளார்.
 
ஆனாலும், நீங்கள் அதற்கு தகுதியானவர்தான். உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் அவரின் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.