வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (17:51 IST)

விஷாலின் ‘சக்ரா’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு

விஷால் நடித்து வரும் அதிரடி ஆக்சன் திரைப்படமான ‘சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து தற்போது லாக்டவுன் நேரத்தில் பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அனேகமாக தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
விஷால் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று ஜூன் 22ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகவிருப்பதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விஷால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
 
விஷால் ஜோடியாக ரெஜினா நடித்திருக்கும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ஷ்ராதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆனந்தன் என்பவர் இயக்கியுள்ளார். 
 
விஷால் ஏற்கனவே ‘துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக இயக்குனர் மிஷ்கின் விலகிவிட்டதால், விஷாலே இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.