வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2020 (16:35 IST)

விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா? பலருக்கும் தெரியாத தகவல்!

நடிகர் விஜய்யின் தம்பியான விக்ராந்தின் மனைவி ஒரு சீரியல் நடிகை என்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

நடிகர் விஜய்யின் உறவினரான விக்ராந்த் சினிமாவில் அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டு இருக்கிறார். விஜய்யின் தம்பி என்றாலும் அவருக்கு சினிமாவின் கதவுகள் இன்னும் எளிதாக திறந்துவிடவில்லை.

இந்நிலையில் அவர் மனைவியும் ஒரு நடிகை என்பது தெரியவந்துள்ளது. மானசா என்ற பெயரில் தமிழ் மற்றும் மலையாளத்தில் சில சீரியல்களில் அவர் நடித்துள்ளார். ஆனால் அவர்தான் விக்ராந்தின் மனைவி என்பதே திரையுலகிலும் பலருக்கும் தெரியாதாம். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.