ஜகமே தந்திரம் விமர்சனங்களால் அப்செட்டில் விக்ரம்!
நடிகர் விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பார்த்து அப்செட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ் தளத்துக்கும் இந்த படத்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கைக் கூடவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கார்த்திக் சுப்பராஜுக்கு தனது அடுத்த படத்தைக் கொடுத்துள்ள விக்ரம் கொஞ்சம் ஆடிப்போயுள்ளாராம். ஏற்கனவே 10 வருடங்களாக தொடர்ந்து வெற்றிப்படமே இல்லாத நிலையில் இந்த படத்தை பெரிதும் நம்பி இருந்தாராம் விக்ரம்.