1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (10:58 IST)

விக்ரம்- பா ரஞ்சித் படத்தின் பூஜை எப்போது? வெளியான தகவல்!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பூஜை நாளை சென்னையில் நடக்க உள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தலைப்பை வைத்து இந்த திரைப்படம் ஸ்போர்ட்ஸ் ஜானராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து படத்தின் பூஜை நாளை சென்னை NFDC உள்ள தாகூர் பிலிம் செண்டரில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு சில மாதங்கள் கழித்து பின்னர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.