ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (09:15 IST)

விக்ரம் படத்தின் ரிலீஸில் மேலும் ஒரு தடங்கல்!

கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ரிலிஸ் தேதி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். 

இதன் படப்பிடிப்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போது மீண்டும் சென்னையில் நடந்து வந்தது. அங்கு க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளை படமாக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். இப்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் 6 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ளதாம். அதை முடித்துவிட்டு விரைவில் பின் தயாரிப்புப் பணிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் தாமதமாகியுள்ளதால் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.