ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (16:18 IST)

3 நாட்களில் ரூ.53.64 கோடி வசூல்.. தங்கலான் தயாரிப்பாளர் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கிண்டல்.!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனம் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் 3 நாட்களில் 53 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியானதும் அந்த திரைப்படத்தின் வசூல் விவரங்களை முன்பெல்லாம் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்வார்கள். அவை பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாக இருக்காது என்றும் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகரின் வசூல் தொகையை இஷ்டத்துக்கு அளந்து விடுவார்கள் என்று தான் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பாளர்களே ஒரு படத்தின் வசூல் தொகையை அதிகரித்துக் கூறும் வழக்கம் ஏற்பட்டுள்ளதாக திரையுலகினரே குற்றம் தாட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தங்கலான் திரைப்படம் வெளியாகிய முதல் நாளே சுமார் 50% பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கங்கள் இருந்த நிலையில் இந்த படம் மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.53.64 கோடி  வசூல் செய்ததாக கூறி இருப்பதை நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் தயாரிப்பாளர் வசூல் தொகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் இது உண்மை தொகையாக தான் இருக்கும் என்று இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Edited by Siva