செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:11 IST)

“இன்னமும் கோப்ரா டப்பிங் பணிகள் முடியவில்லை…” மேடையிலேயே உண்மையை உடைத்த விக்ரம்!

கோப்ரா படத்தின் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. ஆனால் இன்னும் படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடியவில்லை என சொல்லப்படுகிறது.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’  திரைப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்தப் படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்துக்கு மேல் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விக்ரம் மேடையில் பேசும் போது இன்னும் படத்தின் டப்பிங் பணிகள் முடியவில்லை. அதனால்தான் படத்தின் இயக்குனர் அஜய் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வில்லை எனப் பேசியுள்ளார்.