திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (08:41 IST)

பிரபல ஓடிடியில் விக்ரம் நடித்த கோப்ரா ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸானது கோப்ரா திரைப்படம். ஆனால் பெரிய அளவில் இந்த படம் திருப்திப் படுத்தவில்லை.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’  திரைப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸான நிலையில் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்த நிலையில் 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரும் பொருட்செலவில் உருவான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் தோல்விப் படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த திரைப்படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.