மன்னர் மகாராணா பிரதாப் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்!
இயக்குனர் ராஜமௌலி இயக்கிய அனைத்து படங்களுக்கும் கதை எழுதியது அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தான். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் அவர் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் கதாசிரியராக ஆகியுள்ளார். சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்துக்கும் அவர்தான் கதை எழுதியுள்ளார். அது தவிர பஜ்ரங்கி பைஜான் உள்ளிட்ட வெற்றி படங்களுக்கும் அவர் கதை எழுதியுள்ளார்.
இப்போது ராஜமௌலி மகேஷ் பாபு இணையும் படத்தின் கதையை எழுதி முடித்துள்ள அவர் அடுத்து 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உதய்ப்பூர் மன்னார் மகாராணா பிரதாப்பின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த கதையை 16 ஆம் நூற்றாண்டு மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு தளங்களில் எழுதி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் ரன்பீர் கபூர், பிரபாஸ் அல்லது ஹ்ருத்திக் ரோஷன் ஆகியவர்களில் ஒருவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த படத்தை இயக்கப் போவது யார் என்பதை இன்னும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.