செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (18:23 IST)

அரசியலை கலந்து அலப்பறை பண்ணிய விஜய்..! வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்!

GOAT Song
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் ‘விசில் போடு’ பாடல் வெளியான நிலையில் அதில் அரசியல் குறித்த வரிகள் வைரலாகி வருகிறது.



வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் படம் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டில் ‘கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார். விசில் போடு என்ற இந்த பாடலின் தொடக்கத்தில் ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா.. Campaign தான் தொறக்கட்டுமா.. மைக்கை பிடிக்கட்டுமா?” என தனது அரசியல் வருகையை உணர்த்தும் விதமான வரிகளை பாடியுள்ளார் நடிகர் விஜய்.

இந்த பாட்டு தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரிடையே வைரலாகி வருகிறது. பாட்டை போலவே படத்திலும் அரசியல் காட்சிகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த பாடலில் விஜய் – பிரபுதேவா காம்போ டான்ஸ் சிறப்பாக அமைந்துள்ளதால் முழு பாடலையும் காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K