சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்த விஜய் – பின்னணி என்ன?
விஜய் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை தனியாகப் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார். மார்ச் மாத தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரலில் படம் ரிலிஸாக உள்ளது. இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்பது பெரிய கேல்வியாக இருந்தது.
இந்த பட்டியலில் பாண்டிராஜ், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் பெயர் இருக்க, சுதா கொங்குரா சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் இயக்கிய சூரரைப் போற்று திரைப்படத்தை பார்க்கவேண்டும் என அவர் சொல்லியுள்ளார்.
இதையடுத்து விஜய்க்கு தனியாக அந்த திரைப்படம் காட்டப்பட்டுள்ளது. அந்த படத்தை பார்த்து சுதாவின் மேல் நம்பிக்கை வந்த பின்னர் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.