திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 20 பிப்ரவரி 2020 (11:20 IST)

உன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் - ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா - வீடியோ!

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகரான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். அதையடுத்து நோட்டா , டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து கலெக்ஷனில் கல்லா கட்ட செய்தார்.
 
தற்போது கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக நடித்துள்ளனர். கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார். கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் தயாரிதுள்ள இப்படம் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படகுழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக விஜய் தேவரகொண்டா ,  ராஷிகண்ணா கூடவே ராஷ்மிகா மந்தனாவும் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர் . அப்போது ராஷி கண்ணா,  "ஒரு மருத்துவருடன் டேட்டிங் செய்தால் எப்படி இருக்கும்"  என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய விஜய் தேவரகொண்டா " அவர் உன்னுடைய கன்னங்களை கன்னங்களாக பார்க்கமாட்டார். அதற்கு மாறாக அவர் அதனை ஒரு மருத்துவ ரீதியாக தான் பார்ப்பார். மேலும், அவர் உங்களுடைய மார்பை மார்பாக பார்ப்பதற்கு பதிலாக அப்பர் தொராக்ஸ்(மேல் தோராக்ஸ் ) என்று தான் கூறுவார் என பேசி கேலி செய்தார். இந்த வீடியோ சமூகலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.