வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (20:19 IST)

சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு

தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே அதிக டிஆர்பி பெறுவதில் கடும் போட்டி இருக்கிறது. அதிலும் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டிவியும், சீரியல் வழங்குவதில் சன்டிவியும் டாப்பாக இருந்தன.
 
ஆனால், சன் டிவி எப்போது சனிக்கிழமையும் சீரியலை ஒளிப்பரப்பியதோ அன்றிலிருந்து அவர்கள்தான் முதல் இடத்தில் உள்ளனர். அதை பார்த்த ஜீ தொலைக்காட்சியும் அதே பாணியை கடைப்பிடிக்க, ஜீ சேனலும் தற்போது உச்சத்தில் இருக்கிறது. 
 
இதனால் இனியும் நிகழ்ச்சிகளை நம்பி பயனில்லை என்று விஜய் டிவியும் சீரியலை 6 நாட்களாக மாற்றியுள்ளது, பார்ப்போம் இந்த மாற்றம் எங்கு கொண்டு செல்லும் என, ஆனால், சன் டிவி டிஆர்பியை யார் நினைத்தாலும் தொட முடியாத இடத்தில்தான் உள்ளது.