மாடு மேய்க்கும் மாஸ்டர் நடிகர் - இப்படி ஒரு பின்னணியில் இருந்து வளர்ந்தவரா இவர்!
விஜய் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சிகளில் போன் கால் மூலம் பிரபலமானவர் தீனா. அதையடுத்து இவருக்கு வெள்ளித்திரை நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கார்த்தியின் கைதி படத்தில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார்.
அதையடுத்து தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இத்ற்கிடையில் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது சொந்த ஊரில் மாடு மேய்த்து பால் கறக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள தீனா "வீட்டில் வேளை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு " என கூறியுள்ளார்.