1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (20:45 IST)

காளி படத்தை கைப்பற்றிய விஜய்டிவி

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.
 
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள படம் காளி. இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.
 
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா தயாரித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.