ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (08:21 IST)

விஜய்யின் கோட் படத்தின் ஷூட்டிங்குக்காக கேரளா செல்லும் படக்குழு?

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு “இந்த மாத இறுதியில் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு விடும். அதன் பிறகு ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் உள்ளது. படம் ரீமேக் எல்லாம் கிடையாது. சொந்தக் கதைதான். படத்தில் நிறைய பாடல்கள் உள்ளன. ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். படத்தில்  வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நிறைய உள்ளன. அதற்காக இந்தியாவிலும் லண்டனிலும் பல இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு ரிலீஸ் தேதி குறித்து பேச முடியாது” என தெரிவித்திருந்தார்.

இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் நடக்க இருந்த நிலையில் இப்போது முக்கியமான சில காட்சிகளைப் படமாக்க கேரளாவுக்கு செல்லும் முடிவில் படக்குழு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் கொண்ட கேரளாவில் அமைதியாக ஷூட்டிங் நடத்த முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.