ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 மே 2024 (07:54 IST)

வெளிநாட்டில் ஆடியோ ரிலீஸை நடத்தி கல்லா கட்டப் பார்க்கும் ‘கோட்’ படக்குழு!

அரசியல் வருகையை அறிவித்துள்ள விஜய் தற்போது  GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்று வந்தது படக்குழு.  இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியது. அதே போல தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியதாக சொல்லப்பட்டது.

இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டில் நிகழ்ச்சியை நடத்தினால் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அநேகமாக மலேசியாவில் ஆடியோ வெளியீடு நடக்கலாம் என சொல்லப்படுகிறது.