ரஹ்மான் இசையில் முதல் பாடலை பாடுகிறார் விஜய்
இளையதளபதி விஜய் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஒரு பாடலை பாடி வருவது தெரிந்ததே. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'மெர்சல்' படத்தில் மட்டும் விஜய் பாடவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது
இந்த நிலையில் விஜய் நடித்துவரும் 'தளபதி 62' படத்திற்கு ரஹ்மானே இசையமைக்கவுள்ளதால் இந்த படத்திலாவது விஜய் ஒரு பாடலை பாடுவாரா? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 'தளபதி 62' படத்திற்காக விஜய் ஒரு பாடலை பாடுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாடல் விரைவில் ஒலிப்பதிவு செய்யப்படும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது