1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (16:20 IST)

விஜய் சேதுபதியின் ‘கவண்’ பட வசூல் நிலவரம்!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள படம் கவண். ஹி ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். தமிழகமெங்கும் 320-க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸான ‘கவண்’ படம் கடந்த வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் தமிழகம் முழுக்க ரூ. 10.17 கோடி வசூல் பெற்றுள்ளது.



இத்தகவலை ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா வெளியிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. 
 
விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் சூப்பர் ஹிட் படம் என்றால் அது கவண் தான். விஜய் சேதுபதியின் வேறெந்தப் பாடமும் முதல் மூன்று நாள்களில் இந்த வசூலைப் பெற்றதில்லை. விஜய் சேதுபதியின் கேரியரிலேயே மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ள படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வார நாட்களிலும் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகின்றது என  பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.