திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:33 IST)

மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி…

ஃபேமிலி மேன் என்ற வெப் தொடரை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே. இவர்களின் அடுத்த வெப்தொடரில் விஜய்சேதி பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஃபேமிலி மேன் என்ற படத்தை இயக்கிய ராஜ் மற்றும் டீகேயின் பெயரிடப்படாத ஒரு வெப் தொடரில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், ராஷி கண்ணாவுடன் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இத்தொடருக்கான முதற்கட்ட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இத்தொடரில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ரெஜினா கெசண்டா நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.