1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:05 IST)

காத்துவாக்குல காதல் போச்சு: கேப் விடாம நண்பர்களை சந்தித்து சோகத்தை மறைக்கும் சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மாமியார் வீட்டிலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

ஆனால், அங்கு தான் பிரச்சனையே வெடித்தது. நடிப்பு சுதந்திரத்தை தாராளமாக பயன்படுத்திக்கொண்ட சமந்தா தி பேமிலி மேன் 2 தொடரில் மிகவும் மோசமான காட்சிகளில் நடித்ததால் குடும்பத்திற்குள் அவப்பெயர் உண்டாகிவிட்டதாக சமந்தாவை கணவர் கடிந்துக்கொண்டதாகவும் அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறியதோடு சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை எஸ் என்று மட்டும் மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது. மேலும் அவர் கணவரை பிரிய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுபற்றி இருவரும் இதுவரை வாய் திறந்து பேசவில்லை. இதற்கிடையில் வழிமறித்து பத்திரிகையாளர்கள் விவகாரத்து குறித்த செய்திகளை கேள்வியாக கேட்டால் கொந்தளித்துவிடுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சமந்தா ஜாலியாக தன்னை வைத்துக்கொள்ள தேவைப்படும் ஹேப்பியான விஷயங்களை செய்து வருகிறார். கணவரை பிரிந்த சோகத்தை மறைக்கு தனது நண்பர்கள், பழைய தோழிகள், சினிமா பிரபல நண்பர்கள் என சந்தித்து வருகிறார்.