செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (07:37 IST)

விஜய்சேதுபதியின் சிறப்பான ஆதரவால் மகிழ்ச்சியில் சூர்யா!

surya and vijaysethupathi
ஜோதிகா குறித்த சர்ச்சைக்கு நேற்று சூர்யா தனது தரப்பிலிருந்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்த நிலையில் அந்த விளக்கத்திற்கு தற்போது விஜய் சேதுபதி தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார் 
 
தஞ்சை பெரிய கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக ஜோதிகா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் நேற்று சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஜோதிகா பேசியது சரிதான் என்றும், அவர் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் அவர் பேசிய அனைத்தும் இதற்கு முன்னர் பல பிரபலங்கள், ஆன்மீகவாதிகள் பேசியதுதான் என்றும் எனவே அவர் பேசிய கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார் 
 
ஜோதிகாவின் கருத்துக்கு சூர்யா ஆதரவு தெரிவித்ததை அடுத்து அவருக்கு ஊடகங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சூர்யாவின் அறிக்கை குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ’சிறப்பு’ என்று கூறி சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சூர்யாவுக்கு விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளதால் சூர்யா தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.