தான் பெற்ற தேசிய விருதை இயக்குனரிடம் பகிர்ந்த விஜய்சேதுபதி!
தான் பெற்ற தேசிய விருது இயக்குனருடன் பகிர்ந்தளித்து கொண்ட விஜய் சேதுபதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததற்காக விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது என்பதும், இந்த விருது சமீபத்தில் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற விஜய்சேதுபதி, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா உடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அந்த தேசிய விருதை தியாகராஜன் குமாரராஜா பார்த்து மகிழ்ச்சி அடையும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது