வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2020 (12:46 IST)

இதுக்கு தான் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஓகே சொன்னேன்...!

பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். உடன் ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். 
 
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, ஒரு நடிகராக மட்டும் வலம் எனக்கு விருப்பமில்லை. வித்யாசமான பல ரோல்களில் நடிக்கவேண்டும் என்பது தான் எனக்கு ஆசை. மாஸ்டர் படத்தில் என்னுடைய ரோல் குறித்து  சொன்ன விஷயம் எனக்கு பிடித்திருந்தது எனவே நெகடீவ் ரோல் என்றெல்லாம் பார்க்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன் என கூறினார். 
 
விக்ரம் வேதா, பேட்ட உள்ளிட்ட படங்களில்  வில்லனாக நடித்து அசத்திய விஜய் சேதுபதி  விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளதை பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.