செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:15 IST)

நான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரை உஷார் பண்ணிருப்பேன்.. விடுதலை சக்ஸஸ் மீட்டில் விஜய் சேதுபதி!

கடந்த வாரம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி “ இயக்குனர்கள் சொல்லும் வார்த்தைகளை நடிகர்கள் எவ்வளவு தூரம் கிரகித்துக் கொள்கிறார்கள் என்பது முக்கியம். சுனில் மேனனுக்கும் பெருமாள் வாத்தியாருக்கும் நடக்கும் போலீஸ் ஸ்டேஷன் காட்சியைப் படமாக்கும் போது அவர் மிகவும் பரபரப்பாக இருந்தார். அவரிடம் நான் நீங்கள் நிதானமாக இருந்தால்தான் என்னால் இந்த காட்சியில் நடிக்க முடியும் என்று கூறினேன். அதன் பின்னர் அவர் நிதானத்தின் மூலம் அந்த காட்சியில் நடித்தேன். நான் பெண்ணாக இருந்திருந்தால் அவரை உஷார் பண்ணிடுவேன் போல. இப்போது கூட அவர் கண்ணைப் பார்த்து பேச கூச்சமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.