10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி
96 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில்,10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் இன்று வெளியாகிறது. 10-ம் வகுப்பில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் கதையே 96 படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் 96 படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் இதேபோல நீங்களும் உங்களுடைய 10-ம் வகுப்புப் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த் ஆகியோருக்குக் வேண்டுகோள் விடுத்துள்ளார்,
இதனிடையே தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி, அதில் தான் எங்கே நிற்கிறேன் என்பதை அடையாளம் காட்டத் தவறிவிட்டார். இதனால் யார் விஜய் சேதுபதி என்று கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது,