விஜய் சேதுபதியின் இன்னொரு படமும் ஓடிடி ரிலீஸ்!
விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாள திரைப்படம் ஒன்று ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் கடந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் மற்றும் கரணன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே லாபத்தைக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் திரையரங்குகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படங்கள் மறுபடியும் ஓடிடிக்கு செல்ல ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் பல படங்கள் மீண்டும் ஓடிடி தளத்துக்கு செல்ல ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 19 1 A என்ற படமும் இப்போது ஓடிடி தளத்துக்கு சென்றுள்ளது. இந்த படத்தில் கேரளாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளராக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.