ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:47 IST)

பகலில் ஷூட்டிங்… இரவில் டப்பிங் – மும்பையில் முகாமிடும் விஜய் சேதுபதி பட தயாரிப்பாளர்கள்!

நடிகர் விஜய் சேதுபதி இப்போது மும்பையில் ஒரு இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்போது அதிகப் படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்றால் அது விஜய் சேதுபதிதான். அதுமட்டுமில்லாமல் இப்போது தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் அவர் படங்களில் கமிட்டாகிக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் நடித்து முடித்த படங்கள் ஏராளமாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்நிலையில் இப்போது மும்பையில் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றுள்ள அவர், தான் டப்பிங் பேசி முடிக்க வேண்டியப் படங்களை எல்லாம் அங்கே இருந்தே பேச ஆரம்பித்துள்ளாராம். அப்படி லாபம் படத்தின் முழு டப்பிங்கையும் பேசி முடித்துள்ளாராம். பகலில் இந்தி படத்தின் படப்பிடிப்பு மற்றும் இரவில் தமிழ்ப் படங்களின் டப்பிங் என பிஸியாக இருக்கிறாராம்.