1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 24 மே 2017 (00:05 IST)

தனுஷ், சிம்புவுடன் மோத முடிவெடுத்த விஜய்சேதுபதி

கடந்த பல ஆண்டுகளாகவே தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர்களுக்கு இடையே தொழில்முறை போட்டி கடுமையாக உள்ளது. இந்த நிலையில் தனுஷின் 'விஐபி 2 மற்றும் சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் அதாவது வரும் ரம்ஜான் திருநாளில் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ், சிம்பு படங்கள் மோதுவதால் இப்பொழுதே இருதரப்பு ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


இந்த நிலையில் தனுஷ், சிம்பு படங்கள் ரிலீஸ் ஆகும் அதே ரம்ஜான் தினத்தில் விஜய்சேதுபதியின் 'விக்ரம் வேதா' திரைப்படமும் வெளியாகவுள்ளதாம். இந்த படத்தை ரம்ஜானில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. விக்ரம் வேதா திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி என்ற மும்முனை போட்டியில் வெற்றி பெற போவது யார் என்பதையும் அதுமட்டுமின்றி இதே நாளில் இன்னும் சில திரைப்படங்களும் வெளியாகுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்போம்.