தஞ்சையில் த்ரிஷாவுடன் என்ன செய்கிறார் விஜய் சேதுபதி?
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
‘சுந்தர பாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம்குமார், இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் இந்தப் படம், கும்பகோணத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டில் கதை நிகழ்கிறது. இந்தப் படத்தில் பள்ளி மாணவர்களாக விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கிறது. பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகளை, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தொன்போஸ்கோ பள்ளியில் எடுத்து வருகின்றனர். ட்ராவல் போட்டோகிராபராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.