இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் விஜய், அஜித் படங்கள்!

VM| Last Updated: புதன், 23 ஜனவரி 2019 (20:42 IST)
விஜய் நடித்த துப்பாக்கி, அஜித் நடித்த வேதாளம், சித்தார்த் நடித்த பாய்ஸ் ஆகிய படங்கள் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,


 
ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களை இரண்டாம் பாகம் எடுப்பது இப்போது வழக்கமாகி விட்டது.  அந்த வரிசையில், பில்லா, சிங்கம் 2, காஞ்சனா 2, 2.0, விஸ்வரூபம், அமைதிப்படை 2, சண்டக்கோழி 2 என பல படங்கள் வெளியானது, இப்போது  கமலின் இந்தியன்-2, நட்டியின் சதுரங்க வேட்டை-2, விமலின் களவாணி 2 என சில படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது,
 
இந்நிலையில்  விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி  துப்பாக்கி 2 உருவாக உள்ளது. தற்போது ரஜினி படத்தில் பிஸியாக இருக்கும் முருகதாஸ் அதன் பிறகு மீண்டும் விஜய்யுடன் சேருவார் என தெரிகிறது, இதுபோல் அஜித்தின் வேதாளம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆர்வம் உள்ளது என்று இயக்குனர் சிவா கூறியுள்ளார். இந்த படம் 2015-ல் வெளியாகி வசூல் குவித்தது. அதன்பிறகு வீரம், விவேகம், விஸ்வாசம் படங்களிலும் அஜித்-சிவா கூட்டணி தொடர்ந்தது. தற்போது போனிகபூர் இயக்கும் 2 படங்களில் நடிக்க அஜித்குமார் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு வேதாளம்-2 தயாராகலாம்.
 
இதுபோல் ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளியான பாய்ஸ் படத்தின் 2-ம் பாகமும் தயாராக உள்ளது. இதனை அந்த படத்தில் நடித்த இசையமைப்பாளர் தமன் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :