1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (17:59 IST)

லியோ’ சிறப்பு காட்சி.. ஊடகங்களில் தவறாக பரவி வரும் தகவல்..!

leo vijay
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த அனுமதி குறித்த தவறான தகவல் பரவி வருகிறது. 
 
’லியோ’ படத்தின் குழுவினர் அதிகாலை 4 மணி, 7:00 மணி ஆகிய இரண்டு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவில்  கூடுதலாக ஒரு காட்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது சிறப்பு காட்சியை அதிகாலை 4 மணி அல்லது 7 மணி ஆகிய இரண்டு காட்சிகளில் ஒன்றும் அதன் பிறகு வழக்கமான 4 காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே ஒரு சில ஊடகங்களில் தவறாக குறிப்பிட்டது போல் 4 மணி, 7மணி என இரண்டு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் ‘ஜெயிலர்’ உள்பட ஒரு பல பட திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி அனுமதி தரப்படாத நிலையில் தற்போது ’லியோ’ படத்திற்கு மட்டும் சிறப்பு காட்சி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran