வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (08:01 IST)

மீண்டும் சென்சார் ஆனது விஜய்யின் ‘கோட்’ திரைப்படம்… என்ன காரணம்?

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் கோட் படக்குழுவினர் விஜயகாந்த் குடும்பத்தினரை சென்று சந்தித்தனர்.

இந்த படம் சில நாட்களுக்கு முன்னர் சென்சார் செய்யப்பட்டது. படத்துக்கு UA சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று படம் மீண்டும் சென்சார் செய்யப்பட்டது. இதில் படத்தின் இறுதியில் ப்ளூப்பர் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் 3 மணிநேரம் 3 நிமிடம் நேரம் ஓடும் என்று சொல்லப்படுகிறது.