புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (07:45 IST)

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் ஷூட்டிங் நிறைவு!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன். அடுத்தடுத்து அவர் இயக்கிய பல படங்கள் ஹிட்டாக முன்னணி இயக்குனர் ஆனார். இதனால் சிம்பு மற்றும் விக்ரம் போன்ற முன்னணி இயக்குனர்களை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் படத்தை திட்டமிட்ட படி இயக்கும் முடிக்கும் இயக்குனர்களில் சுசீந்தரனும் ஒருவர். கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட மூன்று படங்களை இயக்கி கோலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் தோல்விப் படங்களாக அமைந்ததால் அவருக்கு இப்போது இறங்குமுகமாக உள்ளது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியை வைத்து ‘வள்ளிமயில்’ என்ற படத்தை இயக்கிவரும் அவர், தற்போது முழுக்க முழுக்க இளைஞர்களை வைத்து ‘வள்ளிமயில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இந்த படத்துக்கு இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.