செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2024 (19:32 IST)

விஜய் அண்ணாகிட்ட க்ளைமேக்ஸே சொல்லாமதான் கோட் ஷூட் தொடங்கினேன்- வெங்கட்பிரபு பதில்!

இந்த ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகி வருகிறது விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. மூன்று பாடல்களுமே ரசிகர்களைப் பெரிய அளவில் ஏமாற்றியுள்ளன. வழக்கமாக விஜய் படங்களில் பாடல்கள் அதிரிபுதிரி ஹிட்டாகும். ஆனால் ஏனோ கோட் பட பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கேக் கூட பிடிக்கவில்லை. இந்நிலையில் இன்று டிரைலர் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலில் “விஜய் அண்ணாகிட்ட முழுக் கதையும் சொல்லாமல்தான் ஷூட்டிங் தொடங்கினேன். க்ளைமேக்ஸ் எடுப்பதற்கு முன்புதான் க்ளைமேக்ஸ் என்னவென்பதை சொன்னேன். அப்போது அதைக் கேட்டுவிட்டு அவர் சிரித்தார். அதுவே இந்த படத்துக்கான வெற்றி” எனக் கூறியுள்ளார்.