திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (17:51 IST)

’பீஸ்ட்’ நெகட்டிவ் விமர்சனம் எதிரொலி: அட்லிக்கு வாய்ப்பு கொடுக்க விஜய் முடிவு?

atlee
இதுவரை இல்லாத அளவில் ’பீஸ்ட்’  படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் அட்லிக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 
 
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றது என்பதும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்ததோ இல்லையோ படம் மாஸாக இருந்ததாக அனைத்து தரப்பிலும் கூறினார்கள்
 
ஒரு மாஸ் நடிகரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் அட்லி செதுக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மீண்டும் அட்லியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும் ’தளபதி 66’ படம் முடிந்ததும் ’தளபதி 67’ படம் அனேகமாக அட்லிக்கு தான் கிடைக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.