திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (23:24 IST)

கமல் கட்சிக்கு பிரசாரம் செய்யும் விஜய் பட நடிகை !

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜெயிக்க வேண்டி பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் காலில் அறுவைச் சிகிச்சை முடிந்து தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன். மக்களுக்கு தன் நேரடிப் பிரசாரம் வீடியோக்கள் மற்றும் டுவிட்டர் மூலம் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. ஆனால் இது உறுதிப் படுத்தப்படவில்லை.

இந்நிலையில், அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நட்சத்திரப் பேச்சாளர்களாக நடிகர்,நடிகைகள் இருப்பார்கள்.

அந்த வகையில்,கமல் கட்சியில் விஜய்யின் கில்லி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஜெனிபர் என்பவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகள் தோறூம் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.

மேலும், இத்தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் கட்சி நிச்சயமாக வெல்லும் எனவும் ஜெனிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.