1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (21:42 IST)

போதும்டா சாமி நடிச்சது... விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜய் தேவரகொண்டா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நோட்டா படமும் சிறந்த ஒப்பனிங் தந்தது. 
 
தற்போது இவர் நடிப்பில் டாக்ஸி வாலா படத்தில் நடித்து முடித்தார். இப்படம் நாளை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால், இந்த படம் 14 ஆம் தேதியே தமிழ் ராக்கர்ஸில் வெளியானது. இந்நிலையில், விஜய் தேவரகொண்ட ஒரு பேட்டியில் நடிப்புக்கு முழுக்க போட உள்ளதாக தெரிவித்தார். 
 
அந்த பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு, நான் டாக்ஸி வாலா படப்பிடிப்பில் இருந்தபோது எனது அம்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்தேன். அதனால் என் மனம் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த பாதிப்போடு படப்பிடிப்பில் பங்கேற்றேன். 
 
ஒரு கட்டத்தில் நடிப்புக்கு முழுக்குபோட்டுவிடலாம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களிடம் பெற்றிருந்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தந்துவிடலாம் என்று கூட எண்ணினேன் என விஜய் தேவரகொண்டா கூறினார்.