ஆக்ஷன் படங்கள் மட்டும் பேன் இந்தியா படங்கள் இல்லை… குஷி படம் குறித்து விஜய் தேவரகொண்டா!
விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவான லைகர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியானது. ரிலீஸூக்குப் பிறகு படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதனால் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்குமளவுக்கு விவகாரம் முற்றியது.
இப்போது விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது. அந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர் குஷி படமும் பேன் இந்தியா படம்தான் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் “இதுவரை பேன் இந்தியா அளவில் வெற்றி பெற்ற படங்கள் எல்லாம் ஆக்ஷன் படங்களாக அமைந்தன. ஆனால் காதல் என்ற உணர்வும் ரசிகர்களுக்கு பொதுவானதுதான். இதனால் காதல் படமும் பேன் இந்திய அளவில் வெற்றி பெறும்” எனக் கூறியுள்ளார்.