திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2023 (18:46 IST)

''பிச்சைக்காரன்-2'' ஷீட்டிங்கில் விஜய் ஆண்டனிக்கு காயம்!

vijayantony
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன்.

இப்படத்தை  இயக்குனர் சசி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் விஜய் ஆண்டனி பணியாற்றினார்.

இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து,  பிச்சைக்காரன்  இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி  தீவில்  நடந்து வரும் நிலையில், பிடிப்பின்போது,  படகு விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்துள்ளதாகவும், அவர், தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் டிவி நெட்வொர்க் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.