மீண்டும் தொடங்கிய விஜய் ஆண்டனியின் வள்ளிமயில் ஷூட்டிங்!
சமீபத்தில் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தால் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்தார். இதனால் அவர் நடித்து வந்த படங்களின் ஷூட்டிங் தடைபட்டது.
அந்த வகையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவந்த வள்ளிமயில் படத்தின் ஷூட்டிங்கும் நின்றது. இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில் வள்ளிமயில் ஷூட்டிங் மீண்டும் திரும்ப நேற்று முதல் தொடங்கியுள்ளது.
வள்ளிமயில் படத்தில் விஜய் ஆண்டனி உடன் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரனே தன்னுடைய வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் மூலமாக தயாரிக்கிறார்.