“வா நண்பா வா…” நெல்சனை வாழ்த்தி விக்னேஷ் சிவன் பகிர்ந்த டிவீட்!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தற்காலிகமாக “தலைவர் 169” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் ”ஜெயிலர்” என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் இந்த போஸ்டரை பகிர்ந்து தனது நண்பரான நெல்சனை வாழ்த்தும் விதமாக “வா நண்பா வா… தலைவரோர பெஸ்ட் பிலிம்-ஆ இது இருக்கும். உன்னுடைய திறமையால் கலக்கு நண்பா” என வாழ்த்தி டிவீட் செய்துள்ளார். முன்னதாக நெல்சன் பீஸ்ட் படத்தின் மோசமான விமர்சனங்களால் கடந்த சில மாதங்களாகவே ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஹிட் கொடுத்து கம்பேக் கொடுப்பார் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.