திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 28 மே 2017 (18:02 IST)

வருத்தெடுத்த சூர்யா ரசிகர்கள்; சரண்டரான விக்னேஷ் சிவன்

சூர்யா ரசிகர்கள் விக்னேஷ் சிவனை மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்த நிலையில் அதிலிருந்து தப்பிக்க தற்போது அவர் சர்ப்ரைஸ் சண்டே பிக் என சூர்யா புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


 

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். இதில் கீர்த்தி சுரேஷ் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். வெகு நாட்களாக படத்தை பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா ரசிகர்கள் மீம்ஸ் போட்டு விக்னேஷ் சிவனை கலாய்த்து வந்தனர். 
 
இதையடுத்து விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸ் சண்டே பிக் என சூர்யா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா ரசிகர்களின் மீம்ஸ் கலாயிலிருந்து தப்பிக்க தற்போது ஒரு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் பர்ஸ்ட் லுக் என குறிப்பிட்டுள்ளார். அதோடு மீம்ஸ் போதும் என்றும் பதிவிட்டுள்ளார்.