நயன்தாராவின் கவர்ச்சிக்கு தடைபோட்ட விக்னேஷ் சிவன்
தமிழ், மலையாளாம், தெலுங்கு என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது கவர்ச்சியாக நடிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், அவரது காதலர் விக்னேஷ் சிவன் கவர்ச்சியாக நடிக்க கூடாது என தடை போட்டுள்ளாராம்.
தமிழ் சினிமா நடிகைகளில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. சில படங்கள் நயன்தாராவுக்காகவே ஓடியது. தொடர் வெற்றி படங்களால் தற்போது உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம்.
கதைக்கு தேவைப்பட்டால் தாராளமாக கவர்ச்சியாக நடிப்பவர் நயன்தாரா, ஆனால் தற்போது பாபு பங்காரம் படத்தில் பாடல் காட்சியில் அரைகுறை ஆடைகள் அணிந்து நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா மறுப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதற்கு காரணம், காதலித்து வரும் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் இனி ரொம்ப கவர்ச்சியாக நடிக்காதே என்று சொல்ல, நயன்தாராவும் காதலனின் கண்டிஷனுக்கு சரி சொல்லி காதலனை சந்தோசப்படுத்தி விட்டார். ஆனால் இயக்குனர்கள் வயிற்றில் புளியை கரைத்து விட்டதாகவும் பேசப்படுகிறது.