விடுதலை படத்தின் படப்பிடிப்பை பாதிக்கும் வானிலை!
தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்போது நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டு அவர் சம்மந்தமான காட்சிகளில் நடித்து வருகிறார். இயக்கம், நடிப்பு என இரட்டைக் குதிரைகளில் இப்போது சவாரி செய்துவருகிறார் கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விடுதலை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகளை தொடங்குவதில் வானிலை தாக்கம் செலுத்தி வருகிறதாம். இப்போது மழை பெய்து வருவதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் படத்தை விரைவில் முடித்துவிட்டு, உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.