திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:05 IST)

விடுதலை படப்பிடிப்பு… மீண்டும் சத்யமங்கலத்துக்கே செல்லும் வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து வருகிறது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

இப்போது அந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சத்யமங்கலத்தில் நடந்தது. ஆனால் அங்கு படம்பிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் அடர் வனப் பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் இரண்டு பகுதிகளில் உள்ள காடுகளுக்கும் வித்தியாசம் அதிகமாக இருப்பதால் மீண்டும் சத்யமங்கலத்திலேயே படப்பிடிப்பை நடத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம். ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளாராம்.