செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (23:45 IST)

சர்பாட்டா படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ்... வைரல்

சர்பாட்டா பரம்பரை படத்தின் வீடியோ பாடல் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் பாராட்டினார். 

சமீபத்தில், இப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் வரும் ஜூலை 22 ஆம் தேதி ’சர்பாட்டா பரம்பரை’ என்ற படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவித்தார்,.

இப்படம் நாளை ரிலீஸாகும் நிலையில், இன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள  வம்புல தும்புல #VambulaThumbula f என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு வெளியாகும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக தன் உடலை மிக வருத்தி அதிக உழைப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார்
ஆர்யா. இப்படத்திற்கு விருதுகள் குவியும் எனவும் பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.