ஜிவி.பிரகாஷின் ’வணக்கம் டா மாப்ள’ படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ்

gv prakashkumar
Sinoj| Last Updated: புதன், 14 ஏப்ரல் 2021 (23:36 IST)

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷ் நடித்துவரும் வணக்கம் டா மாப்ள என்ற படத்தின் முதல் பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த திரைப்படத்திற்கு ’வணக்கம்டா மாப்ள’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது


ஜிவி பிரகாஷ் ஜோடியாக அம்ரிதா ஐயர் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதால் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

வணக்கம் டா மாப்ள என்ற படத்தின் முதல் பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம்
16 ஆம் தேதி சன் நெக்ஸ்டில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :